ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரின் ஆதரவாளர் தாக்கியதில் ஒருவருக்கு காயம்

106 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, சந்தேக நபரான ஆதரவாளர் தனது ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு காயமடைந்த நபருக்கு கூறியுள்ளார்.

இதன்போது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, காயமடைந்தவர் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.