ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் ; அங்கஜன் இராமநாதன்!

84 0
நாட்டில் பல்வேறு வேலை திட்டங்களை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13)  நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறுபட்ட நெருக்கடியில் இருந்த நாட்டினை மீட்டு தற்போது உள்ள நிலைக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்ரமசிங்க அவர்களே எனவே அவருக்கே வாக்களிக்க வேண்டும் .

அதேவேளை, தமிழரசை கட்சியை நம்பிருந்த மக்களுக்கு தமிழரசு கட்சியினர் செருப்படி வழங்கியிருக்கிறார்கள்.

அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத பல்வேறு குழப்ப நிலைக்கு சென்றுள்ளார்கள் இதனால் ஜனாதிபதியை ஆதரிப்பது தொடர்பிலே பல்வேறு குழப்பம் நிகவுகிறது என்றார்.