ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தினக் கூட்டம் புறக்கோட்டையில்

223 0

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மே தினக் கூட்டம் புறக்கோட்டையில் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் ஹெடில்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அனைத்து முக்கியஸ்தா்களும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், மே தினப் பேரணி எதனையும் நடத்தப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புறக்கோட்டையில் அமைந்துள்ள ஈ.ஏ.குணசிங்க சிலைக்கு அருகாமையில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.மே தினமன்று ஈ.ஏ. குணசிங்க தொடர்பில் நூல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.