ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர்க்கட்டணத்தை குறைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
வீட்டுப்பாவனைக்கான நீர்க்கட்டணம் 7 வீதத்தாலும் வைத்தியசாலைக்கான நீர்க்கட்டணம் 4.5 வீதத்தாலும் பாடசாலை மற்றும் மதஸ்தலங்களுக்கான நீர்க்கட்டணத்தை 4.5 வீதத்தாலும் குறைத்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

