இலங்கையின் அபிவிருத்தியில் அரச சேவை முக்கிய பங்கு வகிக்கிறது என்பதோடு அது அபிவிருத்திக்கான உந்து சக்தியாகும். தற்போது அரச சேவையில் உள்ள அனைத்து சவால்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, அரச ஊழியர்களை திருப்திகரமான பணிச்சூழலை எற்படுத்துதல், மக்களுக்கு சிறந்த சேவை, பொருளாதார வளர்ச்சியில் முன்னணிப் பாத்திரத்தை வகிப்பதற்கான உந்து சக்தியாக மாற்றும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டத்தையும், சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட குழு முன்வைத்துள்ளது.
அல்லாத பலன்களை வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச வரிக் கொள்கைக்குள் வரி செலுத்துவோருக்கு சிறந்த அரச சேவையை வழங்கும் தரமான அரச சேவைக்கான உகந்த அளவிலான அரசாங்க பொறிமுறையை தயார் செய்தவதற்கு, இலங்கை தகுதி வழிகாட்டி (SLQF) மற்றும் தேசிய தொழில் தகுதிகள் (NVQ) அடிப்படையில், போட்டித்தன்மையுடைய ஆட்சேர்ப்பு முறையின் கீழ் அரச சேவையில் ஊழியர்களை ஆட்சேர்க்கும் முறை நிறுவப்படும். இது தகுதியானவர்களுக்கு உரிய இடம் அளிக்கும் யுகத்தை உருவாக்கும்.
குறிப்பாக 2025 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளில், டிஜிட்டல் மயமாக்கல் (Digitalization) மற்றும் தன்னியக்கமாக்கலுக்கு (Automation) முன்னுரிமை அளித்து, சாத்தியமான அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பத்தை அரச சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் இ- அரச சேவைக்கு (E-Governance) அரசாங்கத்தின் மூலதன முதலீட்டு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வழங்குநர்களிடமிருந்து பெறுவதன் மூலம் உகந்த செயல்திறன் முறைகள் அறிமுகப்படுத்தப்படும். இது தேவையற்ற பணியாளர்களை அரச சேவையில் சேர்ப்பதை மந்தப்படுத்துவதோடு, மிகவும் பயனுள்ள சேவைகளை மேம்படுத்த அனுமதிக்கிறது. இது பொருளாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்தும்.
இலவசக் கல்வியில் இலங்கை பெற்றுள்ள நற்பெயர் மற்றும் சிறந்த மனித வளம் காரணமாக தற்போது வெளிநாடுகளில் இலங்கையர்களுக்கு உள்ள கேள்வி காரணமாக, தற்போது இலங்கையர்கள் தொழிலுக்காகவும் உயர்கல்விக்காகவும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வது வழமையாக உள்ளது. எனவே, இலங்கை பெறுமதிமிக்க மனித வளத்தை இழக்கும் அதேவேளையில் வெளிநாட்டுக் கல்விக்காக பெருமளவிலான அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு இழுக்கப்படுகிறது.
இலவச உயர்கல்வி வழங்குவதற்கான வரம்புகளுக்குள், வாய்ப்புள்ள ஏராளமான மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு பெற்றோர் அதிக செலவுகளை சுமக்க வேண்டியுள்ளது. போதிய பொருளாதார நன்மைகள் இல்லாத காரணத்தினால் பல்கலைக்கழக அறிவியலாளர்களும் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்து வருகின்றது.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக, இலவச உயர்கல்வியைப் பாதுகாத்து, பல்கலைக்கழகங்களுக்கு சட்ட மற்றும் நிர்வாக சுதந்திரத்தை வழங்கவும், அவற்றின் பௌதிக மற்றும் மனித வளங்களை திறம்பட பயன்படுத்தி நியாயமான அடிப்படை கொண்ட பொருளாதார செலவுகளுடன் கற்கைகளை நடத்த இடமளிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. அதன் மூலம், மேலதிக வருமான வழிகள் அதிகரிப்பதோடு, அனைத்து தரப்பினரும் நன்மைகளைப் பெறுவார்கள்.
செலவின் அடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவதற்கான உத்திகள் தொடங்கப்படலாம்.
ஏற்கனவே சுகாதாரப் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள பௌதிக மற்றும் மனித வளங்களை திறம்பட பயன்படுத்தி அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சுகாதார சேவையை மீள் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேமுறையைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவச் சேவைகளையும் பொருளாதாரப் பலன்களை மேம்படுத்தக்கூடிய ஒரு பகுதியாக மாற்ற முடியும்.
குறிப்பாக சுகாதாரத்துறை சார்ந்த சுற்றுலாத்துறையில் முன்னணி மையமாக விளங்கும் இலங்கையின் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.திறைசேரியின் பதில் செயலாளர் ஏ.கே. செனவிரத்ன மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

