தெற்கு அதிவேக வீதியில் பயணித்த கார் ஒன்று பாதுகாப்பு வேலியிலும் சொகுசு தனியார் பஸ்ஸிலும் மோதி விபத்து

146 0
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கார் வீதியின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதுடன் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு தனியார் பஸ்ஸிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் கிமீ 80. 9 தூண் அருகில் இந்த விபத்து இடம்பெற்று உள்ளது.

இவ்விபத்தில் 16 மற்றும் 21 வயதுடைய இரு மகன்களும் அவர்களது தாயும் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது 21 வயது மகனே காரை செலுத்தி வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வழியாக சென்ற சாரதிகள் காரில் சிக்கியவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க துரித நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.