கொஸ்கமவில் ரயிலுடன் மோதி கார் விபத்து

168 0
களனிவெளி ரயில் மார்க்கத்தில் கொஸ்கம, புதிய அம்பலம் ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (14) புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ரயில் கடவையின் காவலர் கடமையில் ஈடுபடாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ரயில் கடவைக்கு அருகில் பாடசாலையொன்று அமைந்துள்ளமையினால் பிரதேசவாசிகள் மிகவும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தின் போது காரில் நபரொருவர் இருந்துள்ள நிலையில், அவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.