களுத்துறையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

168 0

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பாத பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் களுத்துறை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை , கல்பாத பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 56 லீற்றர் (75 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.