குப்பை அனர்த்தம் தொடர்பில் விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டுங்கள் -தினேஷ்

245 0

மீதொடமுல்ல அனர்த்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றைப் பெற்றுத் தருமாறு கூட்டு எதிர்க் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன இந்த வேண்டுகோளை சபாநாயகரிடம் நேற்று முன்தினம் (18) விடுத்திருந்ததாக அறிவித்தார்.

அனர்த்தத்தின் அகோரத்தின் காரணமாக இந்த விவாதத்தை நடாத்துமாறு தாம் வேண்டியதாகவும், பிரதமர் சபாநாயகருக்கு இதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் தினேஷ் குணவர்தன மேலும் கூறினார்.