நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீதி அமைச்சின் கடப்பாடுகள் முக்கியமாகும்

109 0

சர்வதேச சமூகத்துடன் செயற்படும்போது நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் அத்தியாவசியமாகும். அதேநேரம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீதி அமைச்சின் கடப்பாடுகள் முக்கியமாகும். அதனால் இந்த துறைகளின் செயற்பாடுகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அலிசப்ரி செவ்வாய்க்கிழமை (13) தனது கடமைகளை நீதி அமைச்சில் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின்போது அமைச்சின் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக அவர் கேட்டறிந்ததுடன் இடை நடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் நீதிமன்ற அடிப்படை வசதிகளை மேன்படுத்தல், சட்ட மறுசீரமைப்பு செயற்பாடுகள், டிஜிடல் மயமாக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் நடவடிக்கைகள் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படவேண்டிய முறை தொடர்பில் ஆலோசனை வழங்கினார்.

அதேநேரம் விரைவாக  நிறைவு செய்யப்படவேண்டிய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும். வழக்கு விசாரணை செய்து முடிப்பது மாத்திரமல்ல, நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் நீதி அமைச்சின் கடப்பாடுகள் முக்கியமாகும்.

2020 ஆம் ஆண்டில் இருந்து நீதி அமைச்சின் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்துச் சென்றோம். விசேடமாக  சர்வதேச சமூகத்துடன் செயற்படும்போது நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் முக்கியமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.