98 வீடுகள், பொருட்களை கொள்வனவு செய்ய 2 1/2 இலட்சம்

217 0

மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான 98 வீடுகளை வழங்க, நகர அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய தற்போது நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ள 60 வீடுகளை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கவுள்ளதோடு, ஏனையவை விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த வீடுகளுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய இரண்டரை இலட்சம் ரூபா வரை வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும், அது குறித்து தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, மீதொட்டமுல்லை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ள நஸ்டஈடு குறித்து பல்வேறு செய்திகள் வௌியாகியுள்ள போதும், இது பற்றிய இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என, அனுர பிரியதர்ஷன யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.