சிறீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சி

366 0

d01d0d5ccc69aebda0a48fc326c6e7d7_XLசிறீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகளில் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்றதென்றால், அது நாட்டின் பிரதான சிக்கல்களை தீர்ப்பதற்கும், சர்வதேச அழுத்தங்களிலிருந்தும் விடுபடவுமே. இல்லாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துக்கொண்டு பயணிக்கவேண்டிய தேவையில்லை.

அத்துடன், கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக எழுந்த சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பாரிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்மால் தனித்து முகங்கொடுக்க முடியாது போனது. எனினும் இரண்டு கட்சிகளும் சர்வதேச பிரச்சனைக்கு முகக்கொடுத்து நாட்டை விடுவித்துள்ளோம்.

இதேபோல் தேசிய பிரச்சனைக்கும் ஒன்றாக முகங்கொடுத்துப் பயணிக்கவேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலைமைகளைச் சரிசெய்வதற்கும் ஒன்றிணைந்து நாம் செயற்படுவோம்.

நாம் ஒன்றிணைந்து செயற்பட்டாலும் இரண்டு கட்சிகளினதும் கொள்கைகள் வேறு. ஆகையால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சிலர் மும்முரமாகச் செயற்படுகின்றனர். அவர்களில் ஒருவர் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க. அவர் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.