வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருட்டு ; சந்தேக நபர் கைது

98 0

பல்வேறு பிரதேசங்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களை மிகவும் சூட்சுமமான முறையில் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் வெல்லவாய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த  51 வயதுடைய நபரொருவராவார்.

சந்தேக நபரிடமிருந்து, 09 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  வெல்லவாய  பிரதேசத்தில் வைத்துத் திருடப்பட்டவை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.