குருணாகல், பன்சியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொல்வத்தயாய பகுதியில் நேற்று (05) காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பன்சியகம பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல், மக்குல்பொத்த பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய வயோதிபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் இருக்கும் போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

