தோ்தல்கள் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) ஜனாதிபதி தோ்தலுக்கான கட்டுப்பணம் வைப்புச் செய்யப்பட்ட வேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹிரினி அமரசூரிய இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் நீண்டகாலமாக உழைத்ததும் நீண்டகாலமாக காத்திருந்ததும் இந்த தருணம் வரும்வரையே. இலங்கைக்கு சமூக நீதியை ஏற்படுத்துகின்ற, தெளிவான தூரநோக்கினைக் கொண்ட, நாகரிகமான தலைவர் ஒருவரை தெரிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு வரும்வரை நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம்.
வரலாற்று ரீதியான மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டை நாகரிகமடைந்த நிலைமைக்கு உயர்த்தி வைக்கக்கூடிய தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது.
எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் வேட்பு மனுக்காக நாங்கள் இன்று கட்டுப்பணத்தை வைப்புச் செய்தோம்.
இன்னும் 48 நாட்களில் நாட்டு மக்களை உயர்த்தி வைக்கக்கூடிய அந்த தோழரை, அந்த தலைவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு வருகிறது.
இன்று இந்த தருணத்தில் அந்த வரலாற்று ரீதியான சந்தர்ப்பத்தின் பங்காளிகளாக அமையக்கிடைத்ததையிட்டு நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.

