யாழில் நல்லை ஆதீன முதல்வரை ஜனாதிபதி சந்தித்து ஆசிபெற்றார்

138 0
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் சமயப் பெரியார்கள், அரச உயரதிகாரிகள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை  யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணவ கட்டுப்பாட்டிலுள்ள வசாவிளான் பிரதேச விடுவிப்பு, இன்டிகோ விமான சேவையை ஆரம்பித்தல், இலங்கை இந்தியாவிற்கான கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.