போரின் போது காணாமல் போனவர்களின் நிலமை தொடர்பில் அந்த குடும்பத்தினர் மனங்களில் தாக்கம் தொடர்வதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காணாமல் போனோரின் குடும்பங்கள் அதிர்ச்சி, பொருளாதார, சட்ட மற்றும் நிர்வாக கஸ்டங்கள் போன்வற்றை தமது அன்றாட வாழ்க்கையில் சந்திப்பதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் 16 ஆயிரம் பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பில் 2004ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் 2015 நவம்பர் வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலான கண்டறிதல்களை செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்த கண்டறிதல் நடவடிக்கையின் போது செஞ்சிலுவை சங்கம், படையினர் மற்றும் காவல்துறையினர் உட்பட்ட காணாமல் போன 395 பேரின் குடும்பங்களை சந்தித்துள்ளது.
அத்துடன், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது அறிக்கையில் நோக்கம் குறித்த குடும்பங்களின் தேவைகளை அடையளப்படுத்தி அதனை பெற்றுக்கொடுப்பதாகும் எனவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, தமது பரிந்துரைகள் காணாமல் போனோர் தொடர்பில் முக்கிய பங்காற்றலை செய்யும் என தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கிளையின் தலைவர் க்ளைரி மேட்ரூட் தெரிவித்துள்ளார்.
- Home
- முக்கிய செய்திகள்
- போரில் காணாமல் போனவர்கள் – உறவுகளின் மனங்களில் தாக்கம் தொடர்கிறது – செஞ்சிலுவை சங்கம்
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

