மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை (01) சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

