திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 26 ஆயிரத்து 51 மில்லி லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சேனையூர் மற்றும் சந்தோஷபுரம் பிரதேசங்களில் கசப்பு உற்பத்தியில் ஈடுபட்டு அதனை வியாபாரம் செய்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் சேனையூர் ஆறு சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவரும் 51 வயதான பெண் ஒருவரும் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் இன்று வெள்ளிக்கிழமை (02) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

