லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அனர்த்தம்

91 0

லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு சென்ற பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று (01) மலையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த பிரித்தானிய பெண், சுற்றுலா பொலிஸார் மற்றும் ஒரு குழுவினரின் உதவியுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எல்ல – பசறை வீதியில் அமைந்துள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு தரிசிப்பதற்காக நேற்று பயணித்த 33 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரே மலையிலிருந்து இவ்வாறு தவறி விழுந்துள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் அவரது வலது கால் காயமடைந்துள்ளது.