இனப்பிரச்சினைக்கான தீர்வாக சுயாட்சி மிக்க பிரதேசங்கள் – இனங்களிற்கான சுயாட்சி!

86 0
image
சுயாட்சி மிக்க பிரதேசங்கள்,இனங்களிற்கான சுயாட்சி உரிமை அவர்களிற்கு மீளப்பெறமுடியாத அதிகாரங்கள் குறித்து அரகலய போராட்டக்காரர்களின்  மக்கள் போராட்ட முன்னணி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற கட்சியின மக்கள் போராட்ட முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வில் கட்சியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்தார்.

எங்களை பொறுத்தவரை மக்கள் என்பது ரணில்விக்கிரமசிங்கவுடன்கைகோர்த்து நிற்கின்றன அதிகார வர்க்கமோ அல்லது இந்த கொடுர ஆட்சியிலே தங்களிற்குரிய வருமானத்தை ஈட்டும்செல்வந்தர்களே முதலாளிகளோ இல்லை என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று இடம்பெற்ற கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

நாங்கள் ஒரு இருண்ட யுகத்திலே மிக மோசமான சூழ்நிலையிலே மிக மோசமான ஆட்சியாளர்களின் கரங்களிலே எங்களின் அன்றாட வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்,

இந்த சந்தர்ப்பத்திலே, மீண்டும் மீண்டும் இந்த அதிகார வர்க்கம் எங்களை மிக மோசமான ஆட்சிக்குமுறைக்குள் வைத்துக்கொண்டு,செல்வந்தர்களிற்காகவும் பெருநிறுவனங்களி;ன் முதலாளிமார்களிற்காகவும் ஒரு அரசாங்கத்தை மீண்டுமொரு முறை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இவர்கள் அடிக்கடி மக்கள் என்ற வார்த்தை பிரயோகத்தினை பயன்படுத்தி வருகின்றனர் உண்மையில் இவர்கள் மக்கள் என்ற வார்த்தை பிரயோகம் எதனை சொல்கின்றது என்பதை இவர்கள் அறிவார்களா?

மக்களின் கொள்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்துடன் நாங்கள் இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம்.

எங்களை பொறுத்தவரை மக்கள் என்பது ரணில்விக்கிரமசிங்கவுடன்கைகோர்த்து நிற்கின்றன அதிகார வர்க்கமோ அல்லது இந்த கொடுர ஆட்சியிலே தங்களிற்குரிய வருமானத்தை செல்வந்தர்களே முதலாளிகளோ இல்லை.

இந்த நாட்;டில் அன்றாடம் வாழ்வதற்கு தவித்துக்கொண்டிருக்கும் விளிம்புநிலை மக்கள்,அன்றாட வாழ்க்கையை முன்னநகர்த்துவதற்கு கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள்.விவசாயிகள் மீன்பிடித்தொழிலாளர்கள் சிறுபான்மையினரான தமிழ் மக்கள் மலையக தமிழ் மக்கள் முஸ்லீம்கள் , இவர்களை தான் நாங்கள் பெரும்பாலும் மக்கள் என்ற அந்த வரையறைக்குள் கொண்டுவருகின்றோம்.

எங்களை பொறுத்தவரை யாரின் பக்கம் நாங்கள் நிற்கவேண்டும் என்ற தெளிவு  எங்களிற்குள்ளது.

எந்தவொரு விடயத்தை எடுத்தாலும் பலவீனமானவர்களின் பக்கம் நின்று பேசுவதுதான் அரசியலில் நியாயமான விடயம் என்பதை நாங்கள் அறிவோம்.

எனவே தான் எங்களின் கொள்கை பிரகடனம் பலவீனமானவர்களை பலப்படுத்துவதற்கான பல அடிப்படைகளை கொண்டிருக்கின்றது.

இன்று நாங்கள் வெளியிடவுள்ள இந்த கொள்கை பிரகடனம் பல கேள்விகளிற்கு பதிலாக அமையும்.

ஏன் நாங்கள் அரசியலுக்குவரவேண்டிய தேவையிருந்தது ஏன் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவேண்டிய தேவையிருந்தது என்பதை எங்கள் கொள்கை விஞ்ஞாபனம் தெரிவிக்கும்.

எங்களின் கொள்கை  ஒன்றே எங்களின் நம்பிக்கை.

ஏனைய வேட்பாளர்களிடம்இல்லாத பல விடயங்கள், மக்கள் என்ற ஒரு சக்தியை நம்பி மக்களின் கரங்களில்தான் இறைமை உள்ளது என்பதை நம்பி நாங்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகின்றோம்.

நாங்கள் பணக்காரர்களோ அதிகார வர்க்கத்தினரோ முதலாளிகளோ இல்லை.

நாங்கள் பணக்காரர்களோ செல்வந்தர்களோ இல்லை,முதலாளிகளோ அதிகாரவர்க்கத்தினரோ இல்லை,நாங்கள் பாதிக்கப்பட்;ட மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாகத்தான் இந்த கொள்கை பிரகடனத்தை முன்வைக்கின்றோம்.

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்கனவே இந்த தேசத்திலிருந்து ஜனாதிபதிகளாக வந்தவர்கள்,குறிப்பாக இந்த தேசத்தில் இருக்ககூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பல்வேறு விடயங்களை பல பொய்களை கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் எவருமே இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த தேசிய இனப்பிரச்சினைக்கு ,தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை சுட்டிக்காட்ட தவறியுள்ளார்கள்.

முதன்முதலாக நாங்கள் இந்த இனவாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்து  உண்மையான பிரச்சினையை அடையாளம் கண்டு,இன்று எங்களின் தேர்தல் விளக்கவுரையில் கொள்கை பிரகடனத்தில் மிக அழகாக,தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதை மிகவும் தெட்டத்தெளிவாக விளக்கியிருக்கின்றோம்.

குறிப்பாக சுயாட்சி மிக்க பிரதேசங்கள்,இனங்களிற்கான சுயாட்சி உரிமை அவர்களிற்கு மீளப்பெறமுடியாத அதிகாரங்கள்,வடக்குகிழக்கு தமிழ் மக்கள் மிகநீண்டகாலமாக எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினை,இராணுவஆக்கிரமிப்பு, சிங்களமயப்படுத்தல்,காணாமல்ஆக்கப்பட்டோர் பிரச்சினை அரசியல்கைதிகளின் பிரச்சினை,போன்றவற்றை தெட்டத்தெளிவாக அடையாளம் கண்டுள்ளோம்.

மக்களுடைய பிரச்சினை அவர்களின் தேவை அடிநாதம் என்னவென்பது எங்களிற்கு தெரியும்.

நாங்கள் மக்களிடமிருந்து வேறுபட்ட ஒரு குழுவாக அதிகாரம் மிக்க ஒரு குழுவாக நிற்பதற்கு ஒருபோதும் விரும்பவில்லை நாங்கள் மக்களோடு மக்களாக நிற்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.