புத்தளத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்ட 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

36 0

புத்தளம் பிரதேசத்தில் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 50ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 44 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவர்.

சந்தேக நபர்கள் புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 98 கையடக்கத் தொலைபேசிகள், 44 கணினிகள் மற்றும் பல சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.