மாத்தளை, மக்குலுகஸ்வெவ பகுதியில் ஏழு வயதுடைய சிறுமி ஒருவர் துப்பாக்கி வெடித்து காயமடைந்து வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி வீட்டை சுத்தம் செய்யும் போது வீட்டிலிருந்த துப்பாக்கி தரையில் விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.
தேவ ஹூய பகுதியைச் சேர்ந்த ஏழு வயதுடைய சிறுமியே காயமடைந்துள்ளார்.
மேலும், விசாரணையில் குறித்த துப்பாக்கி உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

