கொக்குளாயில் தமிழ், சிங்கள மீனவர்களுக்கிடையில் முறுகல்

221 0

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் கரைவலைப்பாடு அளவீட்டுப் பணிகள் தொடர்பிலேயே  சிங்கள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் இடையில் இம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் தமிழ் மீனவர்களின் கரைவலைப்பாடுகளில் அத்துமீறி சிங்கள மீனவர்கள் தொழிலிலீடுபட்டு வருவதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் சென்று தீர்வு எட்டப்பட்டத நிலையில் பிரச்சனை நிலவிவந்தது

இதனடிப்படையில் தமிழ் மக்கள் உரிய ஆவணங்களுடன் சென்று பிரதேச செயலாளரின் அனுமதியுடன் குறித்த தமது பகுதியில் வாடி அமைத்த போது தமிழ் மக்களுக்கு எதிராக அத்துமீறி வாடி அமைத்ததாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

இதனடிப்படையில் கடந்த வழக்கு நடைபெற்ற போது வழக்கினை விசாரித்த நீதிபதி ஆவணங்களையும் பரிசீலித்தபோது அங்கு நில அளவை திணைக்களம் சமர்ப்பித்த வரைபடம் அளவீடு செய்யும் பொது தமது பிரசன்னம் இருக்கவில்லை என கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் தெரிவித்ததர்கமைவாக நீதிபதியினால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டது

அக்கட்டளையில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவு கரைதுரைப்ப்று பிரதேசசெயலாளர் குறித்தபகுதி கிராமசேவையாளர் இவ் வழக்கின் இருதரப்பு பிரதிநிதிகள் பிரசன்னத்துடன் கரைதுரைப்ப்று பிரதேச செயலாளர் ஊடாக குறித்த பிரச்சனைக்குட்ப்பட்ட நிலத்தை கிளிநொச்சி நிலா அளவை தினைக்கள்த்தினரை அளவீடு செய்து திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள தினைக்கலய்த்துக்கு உத்தரவிட்டதோடு அடுத்த வழக்குவரை இருதரப்பினரையும் குறித்தபகுதியில் தொழிலிலீடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் இன்றையதினம் குறித்த பகுதியை அளவீடு செய்ய அனைத்து தரப்பினரும் வருகைதந்த நிலையில் தலைப்பாடு இருந்த இடத்திலிருந்து அளவீடு செய்ய சென்றபோது தலைப்பட்டிர்கான இடம் அடையாளப்படுத்தலில் இருதரப்பினடுக்கிடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்ப்பட்டது முறுகல் நிலை ஏற்ப்பட்டது இதன்பின்னர் அந்த இடத்திலிருது விலகிச்சென்ற அனைவரும் பொலிசாரின் தலையீட்டுடன் சிங்கள மீனவர்களும் கொழும்பிலிருந்து வருகைதந்த நீரியல் வள திணைக்கள அதிகாரிகளும் மக்கள் காட்டிய தலைப்பாட்டு இடத்திலிருந்து முன்னூறு மீற்றருக்கு அப்பாலிருந்து அளவிடவேண்டுமென கோரினர்

இதேவேளை அளவீட்டு பணிக்காக பிரதேச செயலக அதிகாரிகளும் தமது கோரிக்கையாக தமிழ் மக்கள் காட்டிய தலைப்பட்டையே அளவீட்டு ஆரம்பமாக காட்டிய போது அதற்கு உடன்படாதநிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் அளவீட்டில் இல்லாது விலகிச்சென்றனர்

பின்னர் இருதரப்பினரையும் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளையும் வைத்து பொலிசாரின் துணையுடன் அளவீட்டு பணிகள் இடம்பெற்றது

இருப்பினும் இந்த அளவீட்டு பணிகள் தமக்கு திருப்தி அளிக்கைல்லை என தெரிவிக்கும் மக்கள் இதனை நீதிமன்றில் தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்