புத்தாண்டு சுபநேரம் சில மணிநேரத்தில் அசுபம்- மாற்று சோதிடர்கள் குழு விசனம்

481 0

தேசிய சுபநேர குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பால்பொங்குவதற்கான சுபநேரம் அவமங்களகரமானது என்பதை, சிரேஷ்ட பிரபல சோதிடர்கள் முழுநாட்டுக்கும் எடுத்துக் கூறியும் அதனை கலாச்சார அமைச்சின் அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதாகவும், இந்த சுபநேரம் அவமங்களகரமானது என்பதை மீதொடமுல்ல அனர்த்தத்தின் மூலம் தெளிவாவதாகவும் சிரேஷ்ட சோதிடர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாம் சொன்ன செய்தி, புத்தாண்டின் சம்பிரதாயங்கள் ஆரம்பமாகி சில மணித்தியாலத்தில் அவமங்களகரமானது என்பதை பாரிய உயிரழப்புக்கள் மூலம் உணர்த்தியுள்ளதாகவும் மாற்றுக் குழு சோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அவமங்களகரமான நேரங்கள் எதிர்வரும் 8 மாதங்களிலும் வேகமாக தாக்கம் செலுத்தும் எனவும் இதிலிருந்து மீள்வதற்கு விசேட பூஜை வழி வழிபாடுகள் நடாத்தப்பட வேண்டும் எனவும் மாற்று சோதிடர் குழு கருத்துத் தெரிவித்துள்ளது.

சுபநேரம் பார்ப்பதில் சந்திரக் கணிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து தெளிவாவதாகவும் மாற்று சோதிடர் குழு இன்றைய தேசிய சகோதர நாளிதழொன்றுக்கு அறிவிப்புச் செய்துள்ளது