தமிழ் மக்கள் கூட்டணியின் தேசிய மாநாடு இன்று

107 0
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் 3 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது.

கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் சிறப்பு விருந்தினர் உரையாற்றவுள்ளதோடு மாநாட்டில் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.