21 வயதுடைய இந்த யுவதி கொலைக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துருகிரியவில் பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவின்போது இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் நிலைய உரிமையாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே இந்த யுவதி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான யுவதி அத்துருகிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அத்தோடு, அத்துருகிரிய கொலைக் குற்றச் சம்பவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர்களும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

