வவுனியா கந்தசுவாமி கோவில் திருட்டு சம்பவம்

369 0

வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் நேற்று (16) இரவு திருடர்கள் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பெருமளவு பணத்தினைத்திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்வபம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (16) மாலை 6மணியளவில் ஆலயத்தினை மூடிவிட்டுச் சென்றதாகவும் இன்று காலையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபொது ஆலயம் உடைத்திருப்பது தெரியவந்துள்ளது இதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறபை;பாடு மேற்கொள்ளப்பட்டது.

ஆலயத்திற்கச் சென்ற பொலிஸ் குழுவினர் ஆலய நிர்வாக சiயிடமும் ஆலய குருக்களிடமும் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலய மூலஸ்தானம் கத்தி கொண்டு உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தின் அலுவலகத்தினை திருடர்கள் உடைத்து அலுமாரிகளை உடைத்து அதிலிரந்த சக்தி மிக்க ஒலிபெருக்கிச் சாதனத்தினை திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது ஆலய முன்றலிலிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது. கைரேகை நிபுணர்கள் வரவளைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.