இலங்கை சில வருடங்களிற்கு முன்னர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை பெரும் நிதிஉதவியை வழங்கியமைக்காக இலங்கை இந்தியாவிற்கு எப்போதும் நன்றிகடன்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹக்கீம் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.
ஈழம்யுத்தத்தின் பின்னர் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு திரும்பிய போதிலும் அதிகரித்த கடன்கள் காரணமாகவும் வெளிநாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்த முடியாததாலும் இலங்கை சில வருடங்களிற்கு முன்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
எரிபொருள் நெருக்கடி மக்களைபாதித்த நிலையில் இலங்கைமிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளையே இந்தியா பாரிய நிதியுதவியை வழங்கியது.
இந்தியா தக்கதருணத்தில் வழங்கிய உதவிகள் ஆதரவு காரணமாக இலங்கையால் இந்த நெருக்கயை கையாள முடிந்தது என தெரிவித்துள்ள ரவூப்ஹக்கீம் இதற்காக இலங்கை என்றும் இந்தியாவிற்கு நன்றிக்கடன்பட்டதாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கையில் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்தினை முன்னெடுப்பதற்காகஇந்தியாவுடன் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடவையாக நரேந்திரமோடி இந்திய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவில் யார் அதிகாரத்திற்கு வந்துள்ளார் என்பதை விட ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மிகப்பெரிய நாடு ,எந்த தேவையற்ற சம்பவங்களும் இன்றி நாட்டின் பல பகுதிகளில் தேர்தல்கள் சுமூகமாக இடம்பெற்றுள்ளன,மோடியின் கட்சி ஆட்சியை அமைத்துள்ள போதிலும் வலுவான எதிர்கட்சி இது ஜனநாயகத்திற்கு சிறந்த விடயம் எனவும் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

