கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்தவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்!

106 0
கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். 

இவர் நேற்று சனிக்கிழமை (06) காலை மாணிக்க கங்கையில் நீராடியபோதே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் உயிர் காக்கும் படையினர் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் 30 – 35 வயதுக்குட்பட்டவர்  என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.