கதிர்காமத்தில் எசல பெரஹெரா ஆரம்பமாகி சில நிமிடங்களில் ஊர்வலத்தில் பயணித்த யானை குழம்பியதில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (06) எசல பெரஹெரா ஆரம்பமாகிய பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
யானை குழம்பியதில் எசல பெரஹெராவை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து, ஓடியதால் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
காயமடைந்தவர்கள் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் எவரும் கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

