இரண்டு மாணிக்கக் கற்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது

110 0
பன்னல பிரதேசத்தில் பெறுமதியான இரண்டு மாணிக்கக் கற்களை விற்பனை செய்ய முயன்ற  மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

வாகரை பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதான நபர், வடுமுனேகெதர பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுப் பெண் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், இந்த மோட்டார் சைக்கிள்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிக்கவெரட்டிய வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.