தி.மு.க.-அனைத்து கட்சி நடத்தும் கடையடைப்பை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் 25-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கருத்து கூறியதாவது:-
விவசாயிகள் பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்பது வரவேற்கத்தக்கது. இதற்காக நாங்களும் அவர்களுக்காக குரல் கொடுக்கிறோம்.
ஆனால் 25-ந்தேதி முழு அடைப்பு போராட்டத்தில் கடைகளை அடைக்க வேண்டும் என்பதை வியாபாரிகள் ஏற்பார்களா? என்று தெரிய வில்லை.
ஏனென்றால் வணிகர் தின மாநில மாநாட்டுக்காக வணிகர்கள் மே 5-ந்தேதி கடைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒரே வாரத்தில் 2 முறை கடைகளை அடைப்பார்களா? என்பது தெரிய வில்லை.
எனவே 25-ந்தேதி அறிவித்துள்ள கடையடைப்பு போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் நேரில் சென்று தலைவர்களிடம் வலியுறுத்த உள்ளோம்.

