ஐதராபாத்தில் 11 வயதில் பிளஸ்-2 தேறி சாதனை படைத்த சிறுவன்

224 0

ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால் பிளஸ்-2 தேர்வில் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.

ஐதராபாத்தை சேர்ந்தவன் சிறுவன் அகஸ்தியா ஜெயிஸ்வால். 11 வயதே ஆன இவன் யூசுப்குடா செயின்ட் மேரீஸ் ஜூனியர் கல்லூரியில் பிளஸ்-2 படித்து தேர்வு எழுதி இருந்தான்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அவன் 63 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளான்.

இவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2015-ம் ஆண்டு தனது 9 வயதில் தேறி சாதனை படைத்தான்.

தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தமட்டில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு வயது கட்டுப்பாடு இல்லை என்று இன்டர்மீடியட் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அகஸ்தியா ஜெயிஸ்வாலின் தந்தை அஷ்விணி குமார் தனது மகனின் அசாத்திய சாதனை குறித்து கூறு கையில், “11-வயதில் பிளஸ்-2 தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பது எனது மகன் மட்டும்தான். வேறு யாரும் இந்த மாநிலத்தில் இத்தகைய சாதனை படைத்தது இல்லை” என்று குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் டாக்டர் ஆவதுதான் எனது கனவு என்கிறான் அகஸ்தியா ஜெயிஸ்வால்.