தேசிய புலனாய்வு பிரிவின் தகவலிற்கமைவாக மந்திகையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

100 0
அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட  கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த  27 வயதுடைய சந்தேக  நபர் ஒருவர் 02kg 300g கேரள கஞ்சாவுடன் மந்திகை பகுதியில் வைத்து  நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாகக் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபர் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த அரச புலனாய்வு பிரிவினர் 13ஆம் திகதி வியாழக்கிழமை விற்பனை நோக்கத்திற்காகக் கஞ்சாவைக் கொண்டு செல்லும்போது குறித்த கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நெல்லியடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (14) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளர்.