இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி! கைது!

112 0

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை, கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் இஸ்ரேலில் பராமரிப்பு சேவை தொழில் துறையில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 1,689,000 ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக நபரொருவரினால் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (13) ஹொரணை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.