புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நாட்டிலுள்ள 55 வீதமான மக்களுக்கு எதுவும் தெரியாது என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஆனால், புதிய அரசியலமைப்புத் தொடர்பாக பொது மக்களுக்கு உரிய முறையில் தெரியப்படுத்தியுள்ளதாக அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேயநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேயநாயக்க,
உரிய தெளிவுபடுத்தல்கள் காரணமாகவே தமது குழுவுக்கு எழுத்துமூலம் மூவாயிரம் யோசனைகளும், வாய்மூலம் இரண்டாயிரத்து 216 யோசனைகளும் கிடைக்கப்பெற்றதாக அரசியல் யாப்புக்கான பொதுக்கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேயநாயக்க தெரிவித்துள்ளார்.

