வடக்கில் அமைக்க திட்டமிடப்பட்ட பாலங்களில் 32 பாலங்களின் பணி நிறைவு – பிரதம செயலர் அலுவலகம் தெரிவிப்பு

235 0
வட மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 82 பாலங்களில் தற்போது 32 பாலங்களின் பணிகள் முழுயாக வேலை  முடிந்துள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வட மாகாணத்தில் 2016, 2017 , 2018 ஆகிய மூன்று ஆண்டுகாலத் திட்டத்தினில் இலங்கையில் அமைக்கப்பட எண்டியுள்ள ஆயிரம் பாலத்திட்டத்தினில் வடக கிற்கு 82 பாலங்களிற்கான அனுமதிகள் வட மாகாணத்திற்கும் கிடைத்தது. இதன் பிரகாரம் இன்றுவரையில் 32 பாலங்கள் அமைக்கப்பட்டு பூர்த்தியடைந்து விட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட பாலங கள் வடக்கின் 5 மாவட்டங்களையும் உள்ளடக்கியவாறே அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 50 பாலங களும் இந்த ஆண்டும் எதிர் வரும் ஆண்டிலும்பூர்த்தி செய்யப்படும் அவ்வாறு அமைக்கப்படவுள்ள 50 பாலங்களும் வடக்கின் 5 மாவட்டங்களிலும்  தேவையின் அடிப்படையில் இனம்கானப்பட்டுள்ளது. அவ்வாறு இனம் கானப்பட்ட பாலங களின் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு அணைத்து பாலங களும. அடுத்த ஆண்டுக்குள் நிறைவுறுத்தப்படும்.
இவ்வாறு நீண்டகாலமாக தேவையாகவிருந்த ஓர் முக்கிய நிழச்சித் திட்டம் கிடைக்கப்பெற்றதன் மூலம் வடக்கிற்கு ஓர் நன்மை கிட்டியதோடு குறிப்பாக வன்னிப் பகுதியில் மழை காலங களில் அதிகம் சிரம்ப்பட்ட மக்களிற்கு இத் திட்டம் ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. –