இலங்கை உட்பட்ட நாடுகளுக்கான வீசா முறையை தாய்வான் இலகுபடுத்துகிறது

222 0

இலங்கை உட்பட்ட நாடுகளுக்கான தமது நாட்டுக்கான வீசா நடைமுறையை தாய்வான் இலகுப்படுத்தவுள்ளது

தாய்வானின் வெளியுறவு அமைச்சு இதனை அறிவித்துள்ளது

தாய்வான் நியூஸ் செனல் தகவல்படி, இலங்கை, தாய்லாந்து, புருனை, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான வீசா முறையில் பல சலுகைகளை வழங்க தாய்வான் அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நியூ சௌத்பௌன்ட் கொள்கையை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்கீழ் இந்தியா, வியட்நாம் மியன்மார், கம்போடியா, போன்ற நாடுகளின் பயணிகளுக்கு கட்டணமின்றிய வீசாவை தாய்வான் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை இந்தியா, பங்களாதேஸ் பாகிஸ்தான் நாடுகளின் வர்த்தகர்கள், தாய்வானுக்கான இணைய வீசாவுக்கும் விண்ணப்பிக்க முடியும்.