டெங்கு வைரஸ்களின் தன்மையில் ஏற்பட்ட மாற்றத்துடனேயே இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 3 மாதங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயளார்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதத்திலேயே அதிகமான நோயாளர்கள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.

