கதிர்காம காட்டுப்பாதை 30ம் திகதி திறக்கப்படும்!

148 0
காட்டுப் பாதை திறத்தலுடன் 2024 கதிர்காம பாதயாத்திரை வனாந்தரம் ஊடாக உத்தியோகபூர்வ ஆரம்பிக்கப்படுகின்றது.

2024ம் ஆண்டிற்கான கதிர்காம காட்டுப்பாதை திறத்தலுடன் கதிர்காம பாதயாத்திரை வனாந்தரம் ஊடாக எதிர்வரும் 2024.06.30ம் திகதி ஆரம்பிக்கப்படும் என இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம தலைமையில் உகந்தை முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன் பொது கல்முனை வடக்கு, ஆலையடிவேம்பு, லாகுகல, திருக்கோவில் பிரதேச செயலாளர்களும் சமுக அமைப்புக்களை சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள முருக பக்தர்கள் தங்களது பாதயாத்திரையினை உகந்தை முருகன் ஆலயம் நோக்கி மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியவர்கள் உகந்தை தலத்தினை வந்தடைந்து 2024.06.30 அன்று காட்டுப் பாதை திறப்புடன் கதிர்காம கொடியேற்றம் பார்க்க வனாந்தரத்தின் ஊடாக பாதயாத்திரை மேற் கொள்வர்.

மேலும் எதிர்வரும் 2024.07.06 அன்று கதிர்காம ஆலயம் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 2024.07.22ம் திகதியுடன் நிறைவடைகின்றது.

அத்துடன் கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுப்பாதை 2024.07.11ம் திகதி மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2023 சுமார் 27000 மேற்பட்ட பக்தர்கள் காட்டுப்பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.