கப்பம் கொடுக்க மறுத்த பஸ் நடத்துனரை கத்தியால் குத்தி தப்பிச் சென்ற பயணி

113 0

பாதுக்க , ஹங்வெல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்றில் பயணித்த பயணியொருவர் பஸ் நடத்துனரிடம் கப்பம் கோரியுள்ள நிலையில் பஸ் நடத்துனர் பணத்தை தர மறுத்ததால் பயணி, பஸ் நடத்துனரை கத்தியால் குத்தி தப்பிச் சென்றுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது, சந்தேக நபரான பயணி பாதுக்க , துன்னான பிரதேசத்தில் வைத்து பஸ் ஒன்றில் ஏறியுள்ள நிலையில் பஸ் நடத்துனரிடம் 2 ஆயிரம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.

பஸ் நடத்துனர் பணத்தைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபரான பயணி, பஸ் நடத்துனரை கத்தியால் குத்தி காயப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.