பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும் 18 பேர் கைது!

109 0

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (5) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பாதாள உலக கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் கொழும்பு 2, 10, 13 மற்றும் 8 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 55, 48, 39, 28, 48, 47, 51 மற்றும் 27 வயதுடைய 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் மாதிவெல, அங்கொடை, தெஹிவளை மற்றும் இராஜகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30, 51, 35, 32 மற்றும் 27 வயதுடைய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் பிட்டபெத்தர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில் ரொட்டும்ப மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 44, 33, 28 மற்றும் 48 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 1,439 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.