இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்தார்.
உரிய வகையில் பொதுமக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை (07) வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்மதிகளின் கூட்டமைப்பு மூலம் பூமிக்கு மிக அதிவேகமான இணைய சேவையை ஸ்டார்லிங்க் வழங்குகிறது. அதிவேக இணைய வசதி கிடைக்காத தொலைதூரப் பகுதிகளுக்கு இந்த சேவை வழங்குவதே இதன் குறிக்கோள் ஆகும்.

