வடக்கு ,கிழக்கு மற்றும் மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக் கல்வியலாளர்கள் ஒன்றிணைய வேண்டும். வடக்கின் க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் மனதிற்கு நிம்மதி தருகிறது என தொல்லிப்பளை துர்கை அம்மன் தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை முடிவுகள் மற்றும் கல்வி நிலமைகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் கல்விப் பெறுபேறுகள் அதிகரித்துள்ளமை பாராட்டத்தக்கது அண்மையில் வெளியான உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் மனதிற்கு திருப்தி தருகின்றது. இந்த முயற்சிகளை எடுத்த பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.
வடக்கின் கல்வி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும் இவற்றைப் பொருட்படுத்தாது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கூடிய கவனம் எடுத்து ஆர்வம் காட்டியமை பாராட்டத்தக்கது.இவ்வாறானவர்களுக்கு எமது நன்றியுடையவர்களாக இருப்பதுடன் இவர்களுக்கு உதவிகளையும் செய்யவேண்டும்.
சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் பலர் பாடசாலைக்கு ஒழுங்காகவும் நேர ஒழுக்களை கடைப்பிடித்தும் இறுதி வரை ஒழுங்காக பாடசாலைக்கு சமூகம் அளித்திருப்பதாகவும் அதேநேரம் பாடசாலைக்கு நேரங்கள் ஒழுங்கீனம் அற்ற நிலையில் வருகை தந்தவர்கள் ஒழுங்கான பெறுபேற்றை அடையவில்லை என்பதும் அடையாளப்படுத்தக்கூடியதாக இருப்பதாக அதிபர் ஆசிரியர்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. எனவே எதிர்காலத்தில் அனைத்து மாணவர்களும் நேரம், ஒழுக்கம்,கட்டுப்பாடு ஆகியவற்றில் அக்கறை எடுப்பதற்கு பெற்றோர்கள் அதிபர், ஆசிரியர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், இன்று மலையக மாணவர்கள் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருகின்றார்கள் இம் மாணவர்களது விஞ்ஞான துறை வளர்ச்சிக்கு முறையான திட்டமிடல்களை மேற்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பொற்றுக்கொள்ள கல்வித்துறை சார்ந்தவர்கள் உழைக்கவேண்டும்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணம், மலையக கல்வி அபிவிருத்தி தொடர்பாக கூட்டுப்பொறுப்பாக கல்வி சார்ந்த அறிஞர்கள் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும்.
வடக்கு ,கிழக்கு , மலையகம் ஒன்றிணைந்து மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை புலமை வாய்ந்தவர்கள் தயாரித்து அச்சிட்டு நிறுவனங்கள் அவற்றை இலவசமாக வழங்கி தமிழ் மாணவர்களின் கல்விக்கு அபிவிருத்திக்கு உதவி செய்யவேண்டும்.
சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக விண்ணப்பங்கள் அனுப்புவது தொடர்பில் பல்கலைக்கழக கல்வியாளர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது தயாரிப்பது என்பது தொடர்பில் விளக்கங்களை விளங்கி பயனடையச் செய்வதற்கான தெளிவுபடுத்தல்களை முறையாக செய்யவேண்டும்.
வடக்கு கிழக்கு மலையக கல்வியாளர்கள் ஒன்றிணைந்து தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒன்றிணைந்து செயற்படுத்துவதற்கு திட்டமிடல்ளைவேண்டும் செய்நவேண்டும் என்றார்.

