மட்டு. தமிழரசுக் கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவரையும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கும் ரிஜடி அழைப்பு

118 0
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11, 12 ஆகிய திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர்களது வீடுகளுக்கு சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

மாவட்ட தமிழ் அரசுக் கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான லோ. திபாகரனை எதிர்வரும் 11ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு கடிதம் ஒன்றை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் வழங்கியுள்ளனர்.

அதேவேளை, தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12 ஆகிய திகதிகளில் விசாரணைக்கு வருமாறு   பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கடந்த காலம் ஒரே நாளில் 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்துவைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் இந்த புதிய அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.