ஹாஸ்டக் ஜெனரேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது

அரசியலமைப்பின் படிஇ ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து எதிர்வரும் தேர்தலை நடத்தும் பொறுப்பு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளது. ஜனாதிபதித் தேர்தலானது செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என்று மே 09ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. இவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழ்நிலைகளோ தேவையோ இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையின் வீழ்ச்சியடைந்துள்ள பின்னணியில்இ இலங்கையின் எதிர்காலத்திற்கு இந்தத் தேர்தல் பாரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு பிறகு நடைபெறவுள்ள முதல் தேர்தல் இதுவாகும்இ குறித்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மக்கள் தங்கள் தலைவர்களிடமிருந்து அரசியல் ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரினர். இருப்பினும் அதன் அதிருப்தியே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுக்கு காரணமாக அமைந்தது என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
எனவே நேரடி ஜனநாயகத் தேர்தல் மூலம் மீண்டும் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நியமிக்கப்பட்ட காலத்திற்கு அப்பால் தங்கள் பதவிக் காலத்தை நீட்டிக்க அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கும் ஆணையோ அல்லது அரசியலமைப்பு ரீதியிலான உரிமையோ கிடையாது.
ஜனநாயகத்தை நிலைநிறுத்தவும் நாட்டின் எதிர்காலத்திற்காக சரியான நேரத்தில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்தவும் அனைத்து கட்சிகளையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார முன்வைத்த கருத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இக் கருத்தானது அரசியலமைப்பு ரீதியாக நிறுவப்பட்ட தேர்தல் செயல்முறை நாட்டின் ஜனநாயகம் மற்றும் குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு முரணானதாக அமைந்துள்ளது. என ஹாஸ்டக் ஜெனரேசன் தெரிவித்துள்ளது.