ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்து செவ்வாய்கிழமை தான் தெரிவித்த விடயங்களை திங்கட்கிழமை செய்தியாளர் மாநாட்டில் தெளிவுபடுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவது குறித்து நான் செவ்வாய்கிழமை தெரிவித்ததை தொடர்ந்து பலர் பல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் தெரிவித்த விடயங்களை தெளிவுபடுத்துவதற்காக ஜூன்3ம் திகதி செய்தியாளர் மாநாட்டை நடத்தவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் அனைத்துகேள்விகளுக்கும் பதிலளிப்பேன் என பாலிதரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

