அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – மீதோட்ட வீதியில் ஹபரகடை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (28) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு 5 பகுதியைச் சேர்ந்த 44 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பனாகொடயிலிருந்து அத்துருகிரிய நோக்கிப் பயணித்த கெப் வண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சுவரொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது கெப் வண்டியின் சாரதி பலத்த காயமடைந்துள்ள நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் ஹோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

