தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய மற்றும் கொட்டாவ பகுதி பாலத்திலிருந்து கீழே குதித்த இளைஞன் வாகனத்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இளைஞன் அதிவேக வீதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரேனும் அந்த இளைஞனைப் பாலத்திலிருந்து தள்ளினரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துருகிரிய, வல்கம சுவா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகிக் காயமடைந்துள்ளார் என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

